ஜெர்மன் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த வார்சா நகரத்தை விடுவித்தது சோவியத் யூனியன்

Home

shadow

                       1945 ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி ஜெர்மன் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த வார்சா நகரத்தை விடுவித்தது சோவியத் யூனியன். 1939 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வார்ஸா நகரத்தை கைப்பற்றியது ஜெர்மனி.சோவியத் படைகள் வார்ஸா-வுக்குள் புகுந்து ஜெர்மன் படைகளை வீழ்த்தினால், வார்ஸா சோவியத் வசம் சென்று விடும் என அஞ்சியது போலந்துநாடு. ஐந்து வருடம் ஜெர்மன் கட்டுப்பாட்டில் இருந்த போலந்து நாட்டின் தலைநகரான வார்ஸாவை விடுவிக்க 1944ஆம் ஆண்டு போலந்தின் ராணுவம் முயற்சி செய்தது. அந்த முயற்சியில் தோற்றது. தோற்கடிக்கப்பட்ட போலந்து ராணுவத்தினர், ஜெர்மன் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை எதிர்பார்த்து காத்திருந்தது ரஷ்யா. இதன் மூலம் போலந்து நாட்டில் சோவியத்துக்கு ஆதரவாக கம்யூனிஸ அரசை அமைக்க முடியும் என ஸ்டாலின் நம்பினார். வார்ஸாவில் இருந்த ஜெர்மன் படைகள் மீது படையெடுத்தது சோவியத்யூனியன். 1945 ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி ஜெர்மனியை தோற்கடித்து வார்ஸாநகரைக் கைப்பற்றியது.

இது தொடர்பான செய்திகள் :