ஜெர்மன் முற்றுகையை சோவியத் படை உடைத்தது

Home

shadow

        1943 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி ஜெர்மன் முற்றுகையை உடைத்து Leningrad நகருக்குள் சோவியத் படை நுழைந்தது. Ladoga ஏரியின் ஊடாக சிறு பாதை அமைத்து சோவியத் படை லெனின்கிராடு நகரில் நுழைந்ததுதற்போது செயின்ட் பீட்டர்ஸ்ர்க் என அழைக்கப்படும் Leningrad நகரம்  ரஷ்யாவின் பழைய தலைநகராக இருந்ததுஇரண்டாவது உலகப்போரின் போது ரஷ்யா மீது படையெடுத்த ஹிட்லர் லெனின்கிராடு நகரத்தை தாக்கி அழிப்பதற்கு பதில் அதனை முற்றுகையிட முடிவு செய்தார். அதன்படி Leningrad நகரத்தை 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி ஜெர்மன் படை முற்றுகையிட்டது. இதனால் அந்த நகர மக்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான பொருட்களை நகருக்குள் கொண்டு செல்ல முடியவில்லை. குளிரில் இருந்து காத்துக்கொள்ள தேவைப்பட்ட எண்ணெய், நிலக்கரி, உணவுப்பொருட்கள் போன்றவை விரைவிலேயே தீர்ந்துவிட்டன. குளிரும் பசியும் அவர்களின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பனி உறைந்து காணப்பட்டத்தால் இறந்தவர்களை புதைக்கக் கூட வழியில்லாமல் மக்கள் திண்டாடினர். Ladoga ஏரி உறைந்ததால் அதன் வழியே Leningrad-க்குள் சிறிய வண்டிகள் மூலம் உணவுப் பொருளை 1943 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சோவியத் கொண்டுவர ஆரம்பித்தது. குழந்தைகள், முதியவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை அதே வழியில் மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் 872 நாட்கள் முற்றுகை தொடர்ந்தது. 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி ஜெர்மன் படையை வீழ்த்தி சோவியத் படை Leningrad நகரத்தை மீட்டது.

 


இது தொடர்பான செய்திகள் :