தென் ஆப்ரிக்காவில் கைதானார் மோகன்தாஸ் காந்தி

Home

shadow

                  1913ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் நாள் தென் ஆப்ரிக்காவில் கைதானார் மோகன்தாஸ் காந்தி. 1893ஆம் ஆண்டு தன்னுடைய 23வது வயதில் தென் ஆப்ரிக்காவுக்கு சென்றார் காந்தி. மாபெரும் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து செல்லும் வலிமை அந்த மாமனிதருள் இருந்தது அப்போது தெரியவில்லை. அந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. அதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞரான காந்தி,  தென்னாப்பிரிக்காவில் ஏற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. தென் ஆப்ரிக்காவுக்கு வந்த நான்கு ஆண்டுகளிலேயே அரசியல் தலைவராக உருவானார் காந்தி. தென் ஆப்ரிக்காவில் பணி புரிந்த இந்தியர்கள் பலர் சுரங்கம், தோட்டம் மற்றும் ரயில்வே துறையில் இருந்தனர். இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாகவே நியமிக்கப்பட்டனர். இவர்கள் மீது புதிய வரிச் சட்டம் பாய்ந்தது. பல்வேறு அடக்குமுறைகளுக்கும் இந்தியர்கள் ஆளானார்கள். வழக்கறிஞராக பணியாற்றிய காந்தி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். இந்தியர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும் செய்தார். 1913 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் நாள் தென் ஆப்ரிக்காவின் சுரங்கத்தில் வேலை செய்த இந்திய தொழிலாளர்களின் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார் காந்தி. 

இது தொடர்பான செய்திகள் :