தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்டது ஜப்பான்

Home

shadow

        1992 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி

தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்டது ஜப்பான். ஜப்பான் பேரரசு 1910 ஆம் ஆண்டு கொரியா நாட்டை கைப்பற்றியது. முதல் உலகப்போருக்கு பின் சீனா மீது போர்தொடுத்தது ஜப்பான். இந்த போரில் பணியாற்றிய ஜப்பான் ராணுவ வீரர்களுக்கு பாலியல் சேவை செய்ய ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவைச் சேர்ந்த பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ராணுவ வீரர்களுக்கென  உருவாக்கப்பட்ட “Comfort Station” களில் கொரியப் பெண்கள் அடைத்து வைக்கப்பட்டனர். ஜப்பான் ராணுவ வீரர்கள் இவர்களை பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். இந்த முகாம்களில் அடைத்து வைக்கபட்டு சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளானவர்களில் 14 முதல் 18 வயதுக்குள் இருந்த பள்ளிக் குழந்தைகளே அதிகம். 1945 ஆம் ஆண்டு ஜப்பான் கட்டுப்பாட்டில் இருந்து கொரியா விடுதலை பெற்றது. பின்னர் ஜப்பான்-தென் கொரியா இடையே 1965க்கு பின் நல்லுறவு ஏற்பட்ட போதிலும் ஜப்பான் வீரர்கள் நிகழ்த்திய வன்கொடுமைகள் கொரியா மக்கள் மனங்களில் றாத ரணங்களாக இருந்தன. 1992 ஆம் ஆண்டு ஜப்பான் அரசு தனது வரலாற்றுத் தவறுக்காக கொரி மக்களிடம் மன்னிப்பு கேட்டது. 2015  ஆம் ஆண்டு மீண்டும் மன்னிப்பு கோரிய ஜப்பான், பாலியில் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு உதவ 9 மில்லியன் டாலர் தொகையை தென் கொரியாவுக்கு வழங்க முன்வந்தது.

இது தொடர்பான செய்திகள் :