நவகாளிப் யாத்திரை தொடங்கினார் காந்தி

Home

shadow

                             1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் நாள் நவகாளிப் யாத்திரைக்கு புறப்பட்டார் காந்தி. ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு வங்காளத்தின் சிட்டகாங் மாவட்டத்தில் இருந்த நவகாளி என்ற இடத்தில் இந்துக்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. 1946ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் பத்தாம் நாள் தொடங்கிய இந்த வன்முறை ஒரு மாதத்துக்கும் மேல் நீடித்தது. 1946ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக்  விடுத்த நேரடி அறைக்கூவல், நவகாளி வன்முறைக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் குறிப்பாக தற்போது வங்க தேசத்தில் உள்ள நவகாளி மற்றும் திப்பெரா மாவட்டங்களில் படுகொலைகள், பாலியல் வன்கொடுமை, கடத்தல், சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின. ஆயிரக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிற்கு கட்டாய மதம் மாற்றம் செய்யப்பட்டனர். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய காந்தி நவகாளிக்கு செல்ல திட்டமிட்டார். நவம்பர் மாதம் 7ஆம் நாள் நவகாளிக்கு புறப்பட்டார் காந்தி. நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். இது நவகாளி யாத்திரை எனப்பட்டது. வங்க தேசத்தில் நான்கு மாதங்கள் தங்கி, அமைதியை நிலைநாட்ட அந்தப் பகுதியின் பல்வேறு இடங்களுக்கு சென்றார் காந்தி. அந்தப் பகுதியில் அமைதி திரும்ப காந்தியடிகளின் யாத்திரை முக்கிய காரணமாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. வன்முறையில் பாதிக்கப்பட்ட ஹிந்துக்கள் பலர் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் அஸாம் மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 

இது தொடர்பான செய்திகள் :