நிகோல டெஸ்லா பிறந்தார்

Home

shadow

       1856 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 நாள் இயற்பியலாளர், மின் பொறியாளர், இயந்திர பொறியாளர், கண்டுபிடிப்பாளர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான Nikola Tesla (நிகோல டெஸ்லா) பிறந்தார். இன்றைய குரேஷியாவாக இருக்கும் அன்றைய ஆஸ்திரிய பேரரசில் பிறந்த டெஸ்லா, தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கு முடித்தார். கல்லூரி படிப்பிற்கு பின்னர் 1891-ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். சில காலம் நியூயார்க் நகரில் இருந்த நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த அவர், பின்னர் தனது நண்பரின் உதவியுடன் சொந்த நிறுவனத்தை தொடங்கினார். மின்னியல், காந்தவியல் ஆகிய துறைகளில் இவர் செய்த புரட்சிகரமான பங்களிப்புக்களினால் இவர் மிகவும் புகழ் பெற்றார். இவரது தொடக்கப் பணிகள் தற்கால மின் பொறியியலுக்கு முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன. தெல்சாவின் காப்புரிமைகளும், கோட்பாட்டுகளும்; பன்னிலைமை மின் வழங்கல் முறைமைகள், மாறுதிசை மின்னோட்ட மோட்டார்கள், டெஸ்லா சுருள் உள்ளிட்டவையும் டெஸ்லாவின்  திறனுக்கு சான்றாக விளங்குகின்றன. இவர் 1943-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். 


 

இது தொடர்பான செய்திகள் :