நியூ அம்ஸ்டர்டாம் நகரமாக அங்கீகரிக்கப்பட்டது

Home

shadow

                 1653 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 தேதி நகரமாக அங்கீகரிக்கப்பட்டது நியூ அம்ஸ்டர்டாம். வட அமெரிக்காவின் மன்ஹாட்டன் (Manhattan) தீவில் டச் மக்கள் 17 ஆம் நூற்றாண்டில் குடியேறினர். தீவுக்கு நியூ நெதர்லாந்து என்றும் தீவின் நுனிப் பகுதியில் அமைந்திருந்த இடத்துக்கு நியூ அம்ஸ்டர்டாம் எனவும் நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமின் நினைவாக பெயர்சூட்டினர். இங்கு டச்சு மேற்கு இந்தியா கம்பெனி  (Dutch West India Company)யின் காலனி ஆதிக்கத்தில்  தோல் ரோம வர்த்தகம் நடைபெற்றது. இந்தப் பகுதியில் மக்கள் தொகை உயரத்தொடங்கியது. 1653 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 தேதி நகராட்சி அங்கீகாரம் பெற்று நகரமானது நியூ அம்ஸ்டர்டாம். 1664 ஆம் ஆண்டு டச் மக்களிடம் இருந்து இந்தப் பகுதியை ஆங்கிலேயர்கள் ஆக்கரமித்தனர். நியூ அம்ஸ்டர்டாம் என்ற அந்நகரத்தின் பெயர் ஆங்கில சட்டப்படி இங்கிலாந்தின் யார்க் பகுதியின் நினைவாக நியூயார்க் என மாற்றப்பட்டது.


இது தொடர்பான செய்திகள் :