நெல்சன் மண்டேலா காலமானார்

Home

shadow

                                         2013 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி இனவெறியை எதிர்த்து போராடியவரும், தென் ஆப்ரிக்காவின் முதல் கருப்பின அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார். உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவர். 1918 ஆம் ஆண்டு பிறந்த மண்டேலா, சட்டம் படித்து வழக்கறிஞராக பணியாற்றினார். தொடக்கத்தில் அறப்போர் வழியில் நம்பிக்கை கொண்டிருந்த மண்டேலா பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் நெல்சன் மண்டேலா. இனவெறியை எதிர்த்து போராடிய மண்டேலாவுக்கு 1962 ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 27 ஆண்டுகள் சிறையில் இருந்த மண்டேலா 1990 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டர். அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. 1994 முதல் 1999 வரை தென் ஆப்ரிக்காவின் அதிபராக பதவி வகித்தார். 95 வது வயதில் சுவாச தொற்று காரணமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான செய்திகள் :