பயோனீர் 10 நெப்டியூனை கடந்தது

Home

shadow


1983 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 13-ஆம் நாள் தேதி பயோனீர் 10 நெப்டியூனை கடந்தது. 1972-ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டி.டபள்யு.சி எனும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பயோனீர் 10 செயற்கைகோள் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் அதே ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்வெளியில் உள்ள பிற கோள்களை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள் 258 கிலோ எடைக் கொண்டது. 1983-ஆம் ஆண்டு  ஜுன் 13-ஆம் தேதி நெப்டியூன் கோளை கடந்த இந்த செயற்கைகோள், மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களில் முதன் முதலில் நெப்டியூனை கடந்த ஒன்றாகும். நெப்டியூன் குறித்த ஆய்வுகளில் பயோனீர் 10-ன் பங்களிப்பு அதிகமாகும். 30 ஆண்டுகால பயணத்திற்கு பிறகு 2003-ஆம் ஆண்டு பயோனீர் 10 உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

இது தொடர்பான செய்திகள் :