பர்மா மீதான ஜப்பானின் ஊடுருவல் தொடங்கியது

Home

shadow

            1942 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி பர்மா மீதான ஜப்பானின் ஊடுருவல் தொடங்கியது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா இரண்டாம் உலகப்போரில் பங்கு பெற்றதற்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. பின்னாளில் பர்மா விடுதலை அடைய காரணமாக இருந்த ஆங் சான் (Aung San) உள்ளிட்ட தலைவர்கள் பர்மா கம்யூனிஸ கட்சி, மக்கள் புரட்சிகரக் கட்சி போன்றவற்றைத் தொடங்கினர். இவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். இரண்டாம் உலகப் போரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட, இங்கிலாந்திடமிருந்து பர்மாவை மீட்பதை முக்கியமானதாக கருதியது ஜப்பான். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் நேசநாடுகளுக்கு மிகவும் அவசியமான ரப்பர் சப்ளையைத் துண்டிக்க ஜப்பான் எண்ணியது. இதற்காக பர்மாவின் உள்நாட்டுப் புரட்சிக்காரர்களுக்கு உதவத் திட்டமிட்டுளைப் கம்யூனிஸ்டுகளின் உதவியைப் பெறுவதற்காக சீனா செல்ல முயன்ற ஆங்சானைத் தன்பக்கம் இழுத்தது. முப்பது தோழர்கள் என்ற படையை உருவாக்கிய ஆங்சான், ஜப்பானின் ஊடுருவலை எதிர்நோக்கி தனது படையைப் பெருக்கினார். இந்நிலையில் 1942 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி பர்மா மீதான தாக்குதலைத் தொடங்கியது ஜப்பான்.

இது தொடர்பான செய்திகள் :