பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ் நிறுவப்பட்டது

Home

shadow

          1875 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள்  பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ் நிறுவப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் மும்பையில் புகழ்பெற்ற வணிகராக இருந்த பிரேம்சந்த் ராய்ச்சந்த் பாம்பே பங்கு சந்தையை நிறுவினார். 1850களில் 22 பங்கு தரகர்கள் மும்பை டவுன் ஹால் அருகே இருந்த ஆலமரத்தடியில் தங்களது கூட்டங்களை நடத்தினர். சில வருடங்கள் பிறகு தற்போது மகாத்மா காந்தி சாலை என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த ஆலமரத்தடியில் தங்களது கூட்டங்களை நடத்தினர். நாளுக்கு நாள் பங்கு தரகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், வெவ்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்துவதற்கு பதில், தங்களுக்கு என்று ஒரு இடத்தை தலால் தெருவில் 1874ஆம் ஆண்டு தேர்வு செய்தனர். அதன் பின் இவர்களது குழு அதிகாரப்பூர்வமாக The Native Share & Stock Brokers Association என்று அழைக்கப்பட்டது. 1875 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் தேதி பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ் என்று அழைக்கப்பட்ட BSE அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் நாள் இந்திய அரசாங்கத்தால் BSE அங்கீகரிக்கப்பட்டது. உலகின் பத்தாவது பெரிய பங்கு சந்தையாக இது திகழ்கிறது. 

இது தொடர்பான செய்திகள் :