பிரான்கோ ஜெர்மன் போர் முடிவுக்கு வந்தது

Home

shadow

                               1871 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள் பிரெஞ்சுப்படைகளைத் தோற்கடித்த பிரஷ்யப்படைகள், பாரிஸ் நகரைக்கைப் பற்றினர். இது ஒன்றுபட்ட ஜெர்மானியப் பேரரசு உருவாக உதவியது. பிரான்கோ பிரஷ்யன் போர் அல்லது பிரான்கோ ஜெர்மன் போர் என்று அழைக்கப்படும்போர், பிரான்சின் மூன்றாம் நெப்போலியனுக்கும் பிரஷ்யப் பேரரசின் கீழ் இருந்த வடக்கு ஜெர்மன் கூட்டரசுக்கும் இடையே நடைபெற்றது. பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த தெற்கு ஜெர்மனியின் பகுதிகளை விடுவிக்கும் நோக்கில் வடக்கு ஜெர்மன் கூட்டரசுக்குத் தலைமை தாங்கிய ஒட்டோவன் பிஸ்மார்க் எடுத்த நடவடிக்கைகளே இந்தப் போரின் பின்னணியாகக் கருதப்படுகிறது. 1870 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரஷ்யப் பேரரசின் மீது போரை அறிவித்தது பிரான்ஸ்.இதையடுத்து நடைபெற்ற போரில், பிரான்சின் வடகிழக்குப் பகுதியில் ஜெர்மன் கூட்டுப் படைகள் விரைவாக முன்னேறின. பிரான்சின் கிழக்குப் பகுதியிலும் தொடர் வெற்றிகளைப் பெற்ற ஜெர்மன் பிரஷ்ய கூட்டுப்படைகள் மூன்றாம் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலை முறியடித்து 1871 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள் தலைநகர் பாரிசைக் கைப்பற்றின. இப்போர் ஒன்றுபட்ட ஜெர்மனி உருவாகக் காரணமாக அமைந்தது


இது தொடர்பான செய்திகள் :