பீசா கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன

Home

shadow

           1173 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் பீசா கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பீசாவின் சாய்ந்த கோபுரம் இத்தாலி நாட்டில் உள்ள பிசா நகரத்தில் உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில் கட்டட பணிகள் ஆரம்பிக்கப்பட்டபொழுதே கோபுரம் சாயத்தொடங்கியது. கட்டடத்தின் அடித்தளம் சரியாக இல்லாததே இதற்கு முக்கிய காரணம் எனக்கூறப்பட்டது. பிசா கோபுரம் கட்டப்பட்டுள்ள இடத்தின் மண் தரமற்றதாக இருந்தததும் இதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது. 185 அடி உயரமான இந்த கோபுரத்தில் மொத்தம் ஏழு மாடிகள் உள்ளன. இதில் 296 படிகள் உள்ளன. மூன்று கட்டங்களாக நடைபெற்ற இதன் கட்டட வேலை 199 ஆண்டுகள் நடைபெற்றது. காலப்போக்கில் கோபுரம் அதிக அளவு சாயத்தொடங்கியதால், அதனை காப்பாற்றும் நடவடிக்கையில் இத்தாலி அரசு இறங்கியது. 1990 ஆம் ஆண்டு பிசா கோபுரத்தை புதுபிக்கும் பணிகள் தொடங்கின. பத்து ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற புதுபிக்கும் பணி முடிவடைந்து 2001ஆம் ஆண்டு மக்கள் பார்வைக்கு கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் 300 ஆண்டுகளுக்கு கோபுரம் நிலையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.  

இது தொடர்பான செய்திகள் :