புஹ்ரேர்புன்கர் என்று அழைக்கப்பட்ட பதுங்கு குழி அமைக்கப்பட்ட கட்டத்தில் குடியேறினார்

Home

shadow

                  1945 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மன் சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் (Führerbunker)புஹ்ரேர்புன்கர் என்று அழைக்கப்பட்ட பதுங்கு குழி அமைக்கப்பட்ட கட்டத்தில் குடியேறினார். எதிரிப்படைகளின் வான்வழி தாக்குதல்களில் இருந்து தப்பிக்க (Führerbunker) புஹ்ரேர்புன்கர் என்ற பதுங்குகுழி உடனான கட்டடத்தை கட்டினார் ஹிட்லர். ஜெர்மன் தலைநகர் பெர்லினில் இரண்டு கட்டமாக 1936 ஆம் ஆண்டு மற்றும் 1944ஆம் ஆண்டு இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதில் உயர் ரக நாற்காலிகளும், அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வரைபடங்களும் இருந்தன.இதில் ஹிட்லர் மற்றும் அவரின் படை அதிகாரிகள் உபயோகப்படுத்த பல அறைகள் இருந்தன.  டெலக்ஸ், தொலைபேசி சுவிட்ச்போர்டு, மற்றும் இராணுவ ரேடியோ தொகுப்பு உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்கள் இருந்தன.1945 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி இங்கு குடிபுகுந்தார் ஹிட்லர்.இங்கிருந்தபடியே ஜெர்மன் படைகளை வழிநடத்தினார். தனது இறுதி உயிலையும் இங்கு தான் எழுதினார். இங்கு தனது நீண்டநாள் தோழியான (Eva Anna) ஈவா அண்ணாவை ஏப்ரல் மாத இறுதியில் திருமணம் செய்து கொண்டார்.திருமணமான இரண்டு நாட்களில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் இந்த கட்டடத்தை சோவியத் படை தரைமட்டமாக்கியது. இந்த பதுங்கு குழியின் சில பகுதிகள் இன்றும் உள்ளன. ஆனால் அவை பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை.

 

இது தொடர்பான செய்திகள் :