பென்டகன் கட்டி முடிக்கப்பட்டது

Home

shadow

                 1943 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி

அமெரிக்க பாதுகாப்பு துறையின் தலைமையிடமான பென்டகன் கட்டி முடிக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு அமெரிக்க போர்த் துறைக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் இதில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவின் பங்கு அதிகரித்ததால், போர்த் துறைக்கு கூடுதல் இடம் தேவைப்பட்டது. அதிபர் Franklin D. Roosevelt  பென்டகன் கட்டட திட்டத்துக்கு அனுமதி வழங்கினார். அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் 65 லட்சம் சதுர அடி பரப்பில் 1941 ஆண்டு செப்டம்பர் 11 தேதி பென்டகன் கட்டிடத்துக்கான கட்டுமானப்பணி தொடங்கியது. அமெரிக்காவில் கருப்பின பாகுபாடு அதிகம் இருந்த காலம் என்பதால், கட்டடத்தின் அனைத்து பகுதிகளிலும் அது பிரதிபலித்தது. கருப்பின மக்களுக்கு என்று தனியாக உணவு உண்ணும் அறை, கழிப்பறை என அனைத்திலும் இனப்பாகுபாடுகள் இருந்தன. உலகிலுள்ள மிகப்பெரிய அலுவலகக் கட்டடங்களுள் ஒன்றான பென்டகன் 16 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. இங்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.


இது தொடர்பான செய்திகள் :