போர்சுகீஸ் மாலுமி காப்ரல் கோழிக்கோடு வந்தார்

Home

shadow


           1500ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் நாள் போர்சுகீஸ் நாட்டை சேர்ந்த மாலுமி Pedro Alvarez Cabral கோழிக்கோடு வந்தார். இவர் பிரேசில் நாட்டை கண்டுபிடத்தவராக கருதப்படுகிறார். இந்தியாவில் இருந்து மிளகு போன்ற மசாலா பொருட்களை வாங்கி சென்று  வணிகம் செய்யும் நோக்குடன், Cabral இந்தியாவுக்கு அனுப்பப்பட்டர். கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதிக்கு வந்த Cabral, உள்நாட்டு ஆட்சியாளர்கள் அனுமதியுடன், மசாலா பொருட்களை சேமிக்க அங்கு ஒரு கிடங்கை திறந்தார். ஆனால் இவரது இந்த நடவடிக்கை, இந்தியாவுடன் ஏற்கனவே வர்த்தகம் செய்து வந்த அரேபியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அரபியர்கள் போர்சுகீஸ் மாலுமிகளை தாக்கினர். ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். கோபமடைந்த போர்த்துகீஸ்யர்கள் அரேபியர்களின் கப்பல்களுக்கு தீ வைத்தனர். ஆனால் இதன் பின், இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை போர்த்துகீஸ்யர்கள் வலுப்படுத்தினர்.   

இது தொடர்பான செய்திகள் :