மன்னர் பதினாறாம் லூயிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

Home

shadow

1793 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி பிரான்ஸ் மன்னர் பதினாறாம் லூயிக்குமரண தண்டனை நிறை வேற்றப்பட்டது.1774 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் மன்னராக பதினாறாம் லூயி பதவியேற்றார். அவர் பதிவியேற்பதற்கு முன் பிரான்ஸ் நாடு மீளமுடியாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரெஞ்சு அரசு வரிவிதிப்பு திட்டங்களை அமல்படுத்தியது. பல ஆண்டுகளாக பிரான்சில் மோசமான விளைச்சல்காரணமாக மக்கள் ஏற்கனவே அவதிக்கு உள்ளாகி இருந்தனர்.பொருளாதார சுமை காரணமாக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. இத்தகையசூழலில்பிரெஞ்சு புரட்சி வெடித்தது. புரட்சியாளர்கள் அரசருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். 1791 ஆம் ஆண்டு மன்னர் லூயி, ராணி மேரியுடன்ஆஸ்திரியா நாட்டுக்கு தப்பித்து செல்ல முயன்றார்.தப்பிச்செல்ல விடாமல் புரட்சியாளர்கள் அவர்களை பாரிசுக்கு கொண்டு வந்தனர். மன்னரை கட்டாயப்படுத்தி பிரான்சின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற்றனர்.1792 ஆம் ஆண்டு மன்னரும் அரசியும் கைது செய்யப்பட்டு மன்னராட்சி கலைக்கப்பட்டது.ஆஸ்திரியா உள்பட சில உலக நாடுகள் துணையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க முயன்றார் என குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1793 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி மன்னர் பதினாறாம் லூயியின் தலை கில்லட்டின் மூலம் துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


இது தொடர்பான செய்திகள் :