மலேசியா - பினாங்கு பாலம் திறக்கப்பட்டது

Home

shadow


          1985ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் நாள் மலேசியாவில் பினாங்கு பாலம் திறக்கப்பட்டது. மலேசியா நாட்டில் பினாங்கு என்ற தீவு பகுதி உள்ளது. 1985 ஆம் ஆண்டுக்கு முன் வரை பினாங்கு பகுதியில் இருந்து மலேசியாவின் மற்ற பகுதிகளுக்கு நீர் வழி போக்குவரத்து மட்டுமே இருந்தது. தீவுப்பகுதியை மலேசியாவின் மற்ற பகுதிகளுக்கு பாலம் மூலம் இணைக்க வேண்டும் என 1970களின் ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டது. புதிய பாலத்துக்கான திட்டம் தீட்டப்பட்டு 1982 ஆம் ஆண்டு பினாங்கு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாலம் கட்டும் பணி மூன்று ஆண்டுகளில் முடிவடைந்து, 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. 13.5 கிலோமீட்டர் நீளம் உள்ள இந்த பாலம் மலேசியாவின் இரண்டாவது பெரிய பாலமாக கருதப்படுகிறது.


இது தொடர்பான செய்திகள் :