மாஸ்கோ அரசப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது

Home

shadow

         1755ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் நாள் மாஸ்கோ அரசப் பல்கலைக்கழகம் உருவானது. ரஷ்யாவில் உள்ள பழமையான, பெரிய பல்கலைக்கழகம் முதன்முதலில் லோமோனோசோவ் என்ற பெயரில் இயங்கியது. 1755 ஆம் ஆண்டு இந்த பல்கலைக்கழகத்தை நிறுவிய மிகைல் இலமனோசொவ் நினைவாகப் பெயரிடப்பட்டது. இப்பல்கலைக்கழகம், முதன்முதலில், அரச வரலாற்று அருங்காட்சியகத்தில் இயங்கியது. பின்னர், கேத்தரின் என்பவரால் மோகோவயா தெருவிற்கு மாற்றப்பட்டது. முதன்மைக் கட்டிடம் 1782 - 1793 ஆண்டுகளில் கட்டப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில், மெய்யியல், மருத்துவம், சட்டம் ஆகிய மூன்று துறைகளே இயங்கிவந்தன. பல்கலைக்கழகத்தின் அச்சுக்கூடத்தில், பிரபலமான இதழ் அச்சடிக்கப்பட்டது. 1804 ஆம் ஆண்டில், மருத்துவத் துறை பிரிக்கப்பட்டு அறுவை சிகிச்சை, மகப்பேறு, எளிய மருத்துவம் என விரிவுப்படுத்தப்பட்டது. . 18841897, காலத்தில், அதிக நிதி உதவியாலும், அரசின் ஆலோசனையின் பேரில், 1.6 கிலோமீட்டர் நீளத்திற்கு பெரிய வளாகம் கட்டப்பட்டது.1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சிக்குப் பிறகு, ஏழை மக்களின் குழந்தைகளும் பட்டப்படிப்புக்கு சேர்க்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது, ஆய்வு நிபுணர்கள், வெடிகுண்டுகள், வானூர்தி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவினர். அரசு அதிக நிதி ஒதுக்கியதால், புதிய வளாகம் கட்டப்பட்டது. இங்கு நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுக் கூடங்களும், வகுப்பறைகளும் உள்ளன. 1991 ஆம் ஆண்டில், புதிதாக ஒன்பது துறைகள் சேர்க்கப்பட்டன. அரசின் நிதியுதவி, கல்வி அமைச்சகத்தின் தலையீடு இன்றி நேரடியாக பல்கலைககழகத்துக்கு வழங்கப்பட்டது. 2005.ஆம் ஆண்டில் பல்கலைகழகத்தின் 250வது நிறைவு விழா கொண்டாடப்பட்டது.  


இது தொடர்பான செய்திகள் :