மிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது

Home

shadow

              1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி மிர்  விண்வெளிநிலையம் சோவியத் யூனியனால் விண்ணில் நிறுவப்பட்டது. விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட விண்வெளி ஆய்வு மையம் மிர். உலக அமைதியின் சின்னமாக சோவியத் யூனியன் இதனை உருவாக்கியது. 'மிர்' என்பது ரஷ்ய மொழியில் சமாதானம் அல்லது அமைதி எனப் பொருள்படும். ரஷ்ய ராக்கெட் சோயுஸ் மூலமாக முதலில் விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து  மிர் ஆய்வு மையத்திற்கு சென்றனர். அதன் பின்னர் நாசாவின் அட்லாண்டிஸ் விண்கலம் மிர் உடன் இணைந்தது. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம் 'அட்லாண்டிஸ்' என்ற விண்கலத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைத்தது. அந்த விண்கலம் 33 முறை விண்ணிற்கு சென்று திரும்பியுள்ளது. இந்த விண்கலம் முதன்முறையாக மிர் விண்நிலையத்துடன் 1995ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் தேதி இணைந்தது.மிர் விண்வெளி நிலையம் 2001 ஆம் ஆண்டு மார்ச் 23 வரை மட்டுமே இயங்கியது. அதன் பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து விலகி தென் பசிபிக் பெருங்கடலில் விழுந்து மூழ்கியது.

இது தொடர்பான செய்திகள் :