முஅம்மர் அல் கதாஃபி லிபியா நாட்டின் பிரதமராக பதிவியேற்றார்

Home

shadow

           1970 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி முஅம்மர் அல் கதாஃபி லிபியா நாட்டின் பிரதமராக பதிவியேற்றார். லிபிய ராணுவத்தில் பணியாற்றிய கதாஃபி 1969 சில ராணுவ அதிகாரளுடன் இணைந்து லிபியா அரசை கவிழ்த்து, மன்னராட்சியை  முடிவுக்கு கொண்டுவந்தார்.1970 ஆம் ஆண்டு பிரதமராகி,விவசாய புரட்சியை ஏற்படுத்தினார். ஆனால் விவசாய பொருட்களில் அதிக லாபம் இல்லை என்பதனை அறிந்து, லிபியாவின் எண்ணெய் வளத்தை கொண்டு பணம் ஈட்ட முடிவு செய்தார். லிபியாவின் எண்ணெய் வளத்தால் வெளிநாடுகளே அதிக லாபம் சம்பாதிப்பதை உணர்ந்த கதாஃபி, கச்சா எண்ணெய் விற்பனை விலையை அதிகரிக்க முடிவு செய்தார். இவரின் முடிவை வெளிநாடுகள் ஏற்கவில்லை என்றால் எண்ணெய் உற்பத்தியை குறைப்பதாக அறிவித்தார். உலக நாடுகளும் இதற்கு ஒத்துழைத்ததால் வெற்றிகரமாக கச்சா எண்ணெய் விலைஉயர்ந்தது. இவரைத் தொடர்ந்து ஒபெக் நாடுகளான ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா மற்றும் வெனிசுலாவும் 1970க்கு பின் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தின. கதாஃபியின் ஆட்சியில் முதல் பத்து ஆண்டிலேயேலிபியாவின் பொருளாதார வளர்ச்சி பன்மடங்கானது. பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளைவிட லிபிய மக்களின் சராசரி ஆண்டு வருமானம் அதிகரித்தது. மதுவகைளை தடை செய்தார், அரேபியா மொழியை அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்தார், பல்வேறு சீர்திருத்தங்களையும் செய்தார். பெண்களுக்கு சம உரிமை தரும் சட்டத்தை இயற்றினார். திருமணத்துக்கு பெண்களின் அனுமதி அவசியம் எனவும், 16 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது எனவும் சட்டம் இயற்றினார். சமூக முன்னேற்றம் பெற கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.


இது தொடர்பான செய்திகள் :