முதன் முறையாக போர் கப்பலின் மீது விமானம் தரையிறங்கியது

Home

shadow

                   1911 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி

முதன் முறையாக போர் கப்பலின் மீது விமானம் தரையிறங்கியது.அமெரிக்காவில் பிறந்த யூஜின் பர்ட்டன் எலி (Eugene Burton Ely) ஆட்டோ விற்பனையாளராக பணியாற்றினார். இவருடைய நிறுவன தலைவர் ஹென்றி வேம்மி (Henry Wemme) ஈரிறக்கை விமானம் ஒன்றைவாங்கினார். அந்தவிமானத்தை விபத்துக்குள்ளாக்கிய ஈலி, பின்னர் அதனை விலை கொடுத்து வாங்கி பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்.அந்த சமயத்தில், அமெரிக்க கடல் படையில் விமானங்களை இணைப்பது குறித்து அமெரிக்க ராணுவம் ஆலோசனை நடத்தி வந்தது. அமெரிக்க கப்பல் படைக்கு உதவும் வகையில், சில சோதனைகளில் ஈடுபட்ட எலி (Ely), கடல் அருகே உயர்ந்த ஒரு இடத்தில் இருந்து ஈரிறக்கை வானூர்தி (biplane) விமானத்தில் பறந்துகீழேஇறங்கிகடல் நீரைத்தொட்டுச்சென்றார். இதையடுத்து, கப்பலில் விமானத்தைத் தரையிறக்க முடியும் எனக் கண்டறிந்து ஜனவரி 18 ஆம் தேதி, சான் பிரான்சிஸ்கோ ( San Francisco) கடலில் நின்றுகொண்டிருந்த  அமெரிக்க ராணுவ கப்பலான USS பென்சில்வேனியா (USS Pennsylvaniaவில் விமானத்தை இறக்கி வரலாற்றில்அந்தநாளை இடம்பெறச்செய்தார் யூஜின் பர்ட்டன் எலி (Eugene Burton Ely).

இது தொடர்பான செய்திகள் :