மூன்றாவது பானிபட் போர் தொடங்கியது

Home

shadow

         1761 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி மராத்தியப் படைகளுக்கும் ஆஃப்கன் படைகளுக்கும் இடையே டெல்லிக்கு அருகில் உள்ள பானிபட் என்ற இடத்தில் போர் தொடங்கியது. வரலாற்றில் இது மூன்றாவது பானிபட் போர் எனக் குறிப்பிடப்படுகிறது 1680 முதல் 1707 வரை நடைபெற்ற 27 ஆண்டுகால முகல்-மராத்திய போர்கள் காரணமாக டெல்லியின் தென்பகுதி வரை மராத்திய சாம்ராஜ்யம் பரவியது. டெல்லிக்கு மேற்கேயும் மராத்திய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த விரும்பியது மராத்திய அரசு. டெல்லிக்கு வடக்கே 60 மைல் தொலைவில் உள்ள பானிபட் என்ற இடத்தில் சதாசிவராவ் பாஹு தலைமையிலான மராத்தா படைகளுக்கும் அஹமத் ஷா துர்ரானி தலைமையிலான ஆப்கான் படைகளுக்கும் இடையே மூன்றாவது பானிபட் போர் மூண்டது.  பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகப்பெரிய போராக இது கருதப்படுகிறது. பல நாட்கள் நடந்த இந்த போரில் லட்சக்கனக்கான வீரர்கள் உயிரிழந்தனர். 20 அடி அகலத்தில் நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு பதுங்குசாலை அமைத்த ஆஃப்கன் படையினர், அதிலிருந்து எடுக்கப்பட்ட மண்ணைக் கொண்டு 5 அடி உயரமுள்ள பாதுகாப்பு அரணையும் உருவாக்கினர். இந்த பதுங்கித் தாக்கும் தந்திரத்தை அறியாமல் ஆப்கானியரின் தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமானது மராட்டியப் படை. போரில் வென்ற ஆப்கான் படைகள் மராத்திய வீரர்களையும் மக்களையும் கொன்று குவித்தன. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மராத்தியப் படைகள் மீண்டும் போரிட்டு ஆப்கன் படைகளைத் தோற்கடித்து இழந்த பகுதிகளை மீட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :