மொசார்ட் Dissonance Quartet தொகுப்பை இசையமைத்தார்

Home

shadow

       1785ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி Wolfgang Amadeus Mozart , Dissonance Quartet தொகுப்பை இசையமைத்தார். Quartet என்பது இரண்டு violin-கள், viola, மற்றும் cello இசை வாத்தியங்களை வைத்து இசையமைக்கப்படும் தொகுப்பு. Dissonance Quartet  என்பது மொசார்ட் வெளியிட்ட ஆறு string Quartet தொகுப்புகளில் ஆறாவதாகும். புகழ்பெற்ற இசை மேதையான Wolfgang Amadeus Mozart ரோம் பேரரசின் கீழ் இருந்த சால்ஸ்பெர்க் என்ற இடத்தில் 1756 ஆம் ஆண்டு ஜனவரி 27  தேதி பிறந்தார். தற்போது இந்தப்பகுதி ஆஸ்திரியா நாட்டில் உள்ளது. மொசார்ட் இளம் வயதுமுதலே இசை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். கீபோர்ட், violin கருவிகளை வாசிக்கத் தொடங்கிய மொசார்ட், ஐந்தாவது வயதிலேயே இசையமைக்க ஆரம்பித்தார். பதினேழாவது வயதில் சால்ஸ்பெர்க் அரச இசைக்கலைஞராக நியமிக்கப்பட்டார். அதில் மன அமைதி கிட்டாமல் வியன்னாவுக்கு சென்றார். மிகக் குறைவான வருமானம் இருந்தாலும் பல்வேறு இசைத் தொகுப்புகளை வெளியிட்டு புகழ்பெற்றார்.  Symphonies, concertos, and operas ஆகிய வகையான இசை தொகுப்புகளுக்கு இசையமைத்தார். 600 மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டார். மொசார்ட் இசையின் தாக்கம் இன்றும் இசையமைப்பாளர்களிடையே காணப்படுகிறது. உலகின் தலைசிறந்த இசை மேதையாக மொசார்ட் இன்றும் போற்றபடுகிறார். 

இது தொடர்பான செய்திகள் :