யாழ்ப்பாணத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றியது

Home

shadow

 1995 ஆம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி இலங்கையில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணப் பகுதியை, ஏழு வார சண்டைக்குப் பின் இலங்கை ராணுவம் மீண்டும் கைப்பற்றியது. விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அபோதைய அதிபர் சந்திரிகா குமாரதுங்கா புலிகள் மீதான தாக்குதலுக்கு ஆணையிட்டார். 1995 அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கிய தாக்குதலில் பத்தாயிரம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 50 நாள் சண்டைக்குப் பின் யாழ்ப்பாணப் பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றியது. இந்த சண்டையில் 500 ராணுவ வீரர்கள் மற்றும் இரண்டாயிரம் விடுதலைப் புலிகள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பான செய்திகள் :