யுகோஸ்லாவியாவின் கூட்டாட்சி குடியரசு உருவானது

Home

shadow

            1946 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி சோவியத் யூனியனின் மாதிரியைப் பின்பற்றி ஆறு குடியரசு நாடுகள் இணைந்து யூகோஸ்லேவிய சோசியலிச கூட்டாட்சி குடியரசுநாடு உருவானது. போஸ்னியா-ஹெர்சிகோவினா, குரோஷியா, மாசிடோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா மற்றும் ஸ்லோவேனியா (Bosnia- Herzegovina, Croatia, Macedonia, Montenegro, Serbia, and Slovenia) ஆகிய ஆறு குடியரசுகளும், செர்பியாவில் இருந்த தன்னாட்சி பகுதிகளான கொசோவோ (Kosovo) மற்றும்  வோஜ்வோடினா (Vojvodina) ஆகியவை புதிய யூகோஸ்லேவிய நாட்டில் இருந்தன. யூகோஸ்லாவியாவின் சோசலிச கூட்டாட்சி குடியரசு (Socialist Federal Republic of Yugoslavia) வின் தலைநகராக பெல்கிரேட் (Belgrade) நகரம் அறிவிக்கப்பட்டது.கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் வலுவான மத்திய அரசாங்கத்தை அமைப்பதும் ஒன்றுபட்ட பல தேசிய இனங்களை அங்கீகரிப்பதும்இதன் கொள்கையாக இருந்தது. சோவியத் யூனியனைப் பின்பற்றி செயல்பட்டு வந்த யூகோஸ்லேவிய நாடு 1948 ஆம் ஆண்டு தன்னை சோவியத் யூனியனிடம் இருந்து தூரப்படுத்திக்கொண்டது. 1980ஆம் ஆண்டு யூகோஸ்லேவியா உருவாவதற்கு காரணமான தலைவர்களுள் ஒருவரான ஜோசிப் ப்ராஸ் டிட்டோ (Josip Broz Tito)வின் மறைவுக்கு பின் இன ரீதியிலான பதட்டங்கள் அதிகரித்தன. 1991ஆம் ஆண்டில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக நாடுகள் பிரிந்தன.1992 ஆம் ஆண்டு செர்பியா (Serbia) மற்றும் மொண்டெனேகுரோ (Montenegro) பகுதிகள் இணைந்து யுகோஸ்லாவியாவின் கூட்டாட்சி குடியரசு (Federal Republic of Yugoslavia) உருவானது.


இது தொடர்பான செய்திகள் :