ரேஞ்சர் 6 விண்கலம் விண்ணில் பாய்ந்தது

Home

shadow

               1964 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி ரேஞ்சர் (Ranger)-6 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். 1960களில் ரேஞ்சர் திட்டம் (Ranger program) என்று அழைக்கப்பட்ட ஆளில்லா விண்வெளி திட்டதத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் செயல்படுத்தியது. நிலவின் மேற்பரப்பின் முதல் நெருக்கமான படங்களைப் பெறுவது இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது. இதில் ரேஞ்சர் (Ranger)-ஒன்று முதல் ரேஞ்சர் (Ranger)-ஒன்பது வரை ஒன்பது விண்கலங்கள் 1961 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் அனுப்பப்பட்டன. முதல் ஐந்து விண்கல திட்டங்கள் தோல்வியடைந்த நிலையில், 1964 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி Ranger-6 விண்கலம் அனுப்பப்பட்டது. சந்திர மேற்பரப்பின் உயர்தர புகைப்படங்களை எடுப்பதற்காக இதில் ஆறு தொலைகாட்சி கேமெராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த தொலைக்காட்சி உபகரணங்கள் 173 கிலோ எடை கொண்டவையாக இருந்தன. சந்திரனுக்கு அருகாமையில் சென்ற இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமெராக்கள் செயலிழந்ததால், திட்டமிட்ட படி புகைப்படங்களை எடுக்க இயலவில்லை. இந்தத் திட்டம் தோல்வியில் முடிவடைந்தாலும், இது வெற்றியின் முதல் படி என கருதியது நாசா. அதே வருடம் ஜூன் மாதம்அனுப்பப்பட்ட ரேஞ்சர் (Ranger)-7 விண்கலம் நிலவின் மேல்பரப்பின் புகைப்படங்களை எடுத்து பூமிக்கு வெற்றிகரமாக அனுப்பியது.


இது தொடர்பான செய்திகள் :