லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்டார்

Home

shadow

           1929ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி லியோன் ட்ரொட்ஸ்கி (Leon Trotsky) ரஷ்யாவில் இருந்து நாடுகடத்தப்பட்டார். 1879ஆம் ஆண்டு உக்ரைனில் ரஷ்ய-யூத பெற்றோருக்கு மகனாகப் பிறந்த ட்ரொட்ஸ்கி (Trotsky), சிறுவயதில் இருந்தே மார்சிஸ கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டிருந்தார். புரட்சிகர நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்டு சிறை சென்றார். 1905 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியில் பங்குபெற்றார். அதன் பின் பல முறை நாடு கடத்தப்பட்டார். சுவிட்சர்லாந்து, பாரிஸ், ஸ்பெயின் (Switzerland, Paris, Spain), மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்ந்தார். 1917ஆம் ஆண்டு நாடு திரும்பிய ட்ரொட்ஸ்கி (Trotsky), ரஷ்யப் புரட்சியில் விளாடிமிர் லெனினின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். லெனினின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த ட்ரொட்ஸ்கி (Trotsky), முதல் உலகப் போரின்போது ஜெர்மனியுடன் ரஷ்யா நடத்திய பேச்சுவார்த்தையில் டிராட்ஸ்கியின் பங்கு முக்கியமானது.  1922ஆம் ஆண்டு ஸ்டாலினை கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்றும் தனக்கு அடுத்தபடியாக ட்ரொட்ஸ்கி (Trotsky) தான் பதவியேற்க வேண்டும் எனவும் லெனின் வலியுறுத்தினார். ஆனால் ஸ்டாலின் தன்னை அடுத்த தலைவராக உருவாக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். 1924ஆம் ஆண்டு லெனின் மறைவுக்கு பின், ஸ்டாலின் சோவியத் யூனியனின் தலைவரானார். அதன் பின், ட்ரொட்ஸ்கி (Trotsky)யின் பதவிகள் பறிக்கப்பட்டன. சிலகாலம் உள்நாட்டு சிறைவாசத்திற்குப் பின் 1929ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஸ்டாலினால் சோவியத் யூனியனில் இருந்து நாடு கடத்தப்பட்டார்  ஸ்டாலின். 


இது தொடர்பான செய்திகள் :