விக்கிபீடியாவின் தொடக்கம்

Home

shadow

                              2001 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி

விக்கிபீடியா இணையதள கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டது.

அமெரிக்கர்களான Jimmy Wales மற்றும் Larry Sanger இணைந்து நுபீடியா (Nupedia) என்ற ஆன்லைன் கலைக் களஞ்சியத்தைத் தொடங்கினர். இதில் உள்ள பக்கங்கள் வல்லுனர்களை கொண்டு எழுதப்பட்ட. இதுவே விக்கிபிடியாவின் முன்னோடியாக இருந்தது. பின்னர் வாசகர்களே திருத்தங்கள் செய்யும்படியான விக்கிபீடியாவை www.wikipedia.com என்ற முகவரியில் தொடங்கினர். இதில் எவரும் புதிய பக்கங்களை தொடங்கலாம், ஏற்கனவே உள்ள பக்கங்களில் மாறுதல்களை ஏற்படுத்தலாம். அனைத்து பக்கங்களுக்கும் நிலையான பக்க வடிவமைப்பு உள்ளது. தற்போது பதினெட்டு மில்லியன் பக்கங்கள் உள்ளடங்கிய விக்கிபீடியா இணையதளம் 300 மொழிகளில் வெளிவருகிறது. அதில் ஆங்கில மொழியில் உள்ள இணையதளம் அதிகப் பக்கங்களைக் கொண்டது. இது முற்றிலும் இலவசமான ஒரு இணைய கலைகளஞ்சியம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பான செய்திகள் :