விக்டோரியா கிராஸ் விருது நிறுவப்பட்டது

Home

shadow

         1856 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் வீரதீரச் செயலுக்காக பிரிட்டன் வழங்கும் மிக உயரிய விக்டோரியா கிராஸ் விருது நிறுவப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிரான கிரீமியா போருக்குப் பின்னர், மிகவும் வீரத்துடனும் தீரத்துடனும் போராடிய ராணுவ வீரர்களை எவ்விதப் பாகுபாடும் இன்றிக் கவுரவிக்கும் வகையிலான விருதினை உருவாக்க மகாராணி விக்டோரியா உத்தரவிட்டார். அதன்படி ரஷ்யாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீரங்கிகளிலிருந்து எடுக்கப்பட்ட உலோகத்தைக் கொண்டு விக்டோரியா கிராஸ் விருது உருவாக்கப்பட்டது. முதல் விக்டோரியா விருது 1857 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இதுவரை 1300க்கும் மேற்பட்டோர் விக்டோரியா விருதினைப் பெற்றுள்ளனர். லண்டனில் உள்ள ஹேன்காக்ஸ் என்ற நிறுவனம் தொடக்கம் முதல் இன்று வரை விக்டோரியா மெடல்களை உருவாக்கி வருகிறது. ஒரு முறையில் 12 மெடல்களை உருவாக்குவது என்பது பாரம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


இது தொடர்பான செய்திகள் :