விண்வெளி தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் உருவானது

Home

shadow

                          1967 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள்
விண்வெளிப் பயன்பாடு தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் உருவானது. 107 நாடுகள் இதற்கு  உடன்பட்டன. விண்வெளியில் ஆயுதப் பயன்பாட்டுக்கு அனுமதி மறுப்பு,  விண்வெளியை அமைதிக்கான செயல்பாடுகளுக்கு மட்டும் பயன்படுத்துதல், விண்வெளியில் ஏகபோக உரிமை மறுப்பு விண்வெளி ஆராய்ச்சியில் அனைத்து நாடுகளுக்கும் முழு உரிமை,  பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைச் சேர்த்து வைக்கும் தளங்களாகவோ அவற்றைப் பரிசோதிக்கும் களங்களாகவோ விண்வெளியின் எந்தக் கிரகத்தையும் பயன்படுத்த அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. விண்ணில் செலுத்தபடும், அங்கு நிலை நாட்டப்படும் செயற்கைக்கோள் உள்ளிட்ட உபகரணங்களுக்குச் சொந்தம் கொண்டாட அனைத்து நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தம் உரிமை அளித்தது. அதே சமயத்தில், அந்த உபகரணங்களால் ஏற்படும் தீங்குகளுக்கு அவற்றைச் செலுத்தும் நாடுகளெபொறுப்பேற்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் வலியுறுத்தியது. விண்வெளியை ஆயுதமற்ற, பாதுகாப்பான பிரதேசமாக வைத்திருக்க இந்த ஒப்பந்தம் வழி வகுத்தது.  

இது தொடர்பான செய்திகள் :