வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்தார்

Home

shadow

                                   1965ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் நாள் வின்ஸ்டன் சர்ச்சில் மறைந்தார். போர்வீரன், இராணுவ முகாம்களில் பத்திரிக்கைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவன், பாராளுமன்ற உறுப்பினர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர் ஓவியர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் என படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக இருந்த சர் வின்ஸ்டன் லியோனர்டு ஸ்பென்ஸர் சர்ச்சில். இங்கிலாந்தில் உள்ள பிரௌன் ஹீம் அரண்மனையில் 1874-ஆம் ஆண்டு நவம்பர் 30 ம் நாள் சர்ச்சில் பிறந்தார்..சிறுவயதில் சர்ச்சிலுக்கு விளையாட்டிலும், குறும்புத்தனங்களிலும் இருந்த ஈடுபாட்டால்  படிப்பில் கவனம் செலுத்தமுடியவில்லை.விடாமுயரச்சியால் படிப்பை முடித்த சர்ச்சில் இராணுவப் பயிற்சியை முடித்து காலாற் படையில் சேர்ந்தார். பின்னர் .தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளிவந்த மார்னிங் போஸ்ட்என்ற பத்திரிக்கையில் பணியாற்றினார். தென்னாப்பிரிக்காவில் போர் தொடங்கியது.போர் முனைச் செய்திகளைச் சேகரிக்கும் பணியில் சர்ச்சில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்து தப்பிய சர்ச்சில் தாயகம் சென்று அரசியலில் ஈடுபடுவதென்றும் முடிவு செய்து இங்கிலாந்து திரும்பினார். அரசியலில் நுழைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர்; அதற்குப் பின் வந்த உலக மகாயுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சர்; அதன்பின் வந்த தேர்தலில் தோல்வி; மீண்டும் பாதுகாப்பு அமைச்சர் பதவி என்று சர்ச்சிலின் வாழ்க்கை அமைந்தது. எதிரிகளின் பலம், பலவீனம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக எடை போட்டு அதற்குத் தக்கபடி சர்ச்சில் செயல்படுவதில் கைதேர்ந்தவர், அதனால் தான் மீண்டும் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பதவி சர்ச்சிலைத் தேடி வந்தது. உலகம் எதிர்பார்த்தது போன்று இரண்டாம் உலகப் போர் வந்து சேர்ந்தது. எதிரிப் படைகளை தடுப்பதிலும், எதிரி நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பதிலும் சர்ச்சில் தனிக் கவனம் செலுத்தினார். இங்கிலாந்தின் பிரதமர் பதவியும் சர்ச்சிலைத் தேடி வந்தது. பிரதமர் பதவியை ஏற்றதும் ஹிட்லர் முஸோலினிக்கு எதிராக உலக நாடுகளைத் திரட்டும் பணியில் சர்ச்சில் ஈடுபட்டார். ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளையும் இணைத்துக் கொண்டு, ஒரு புதிய வலுவோடு ஹிட்லர் படையை சர்ச்சில் எதிர்த்து நின்றார். உலக நாடுகள் எல்லாம் சர்ச்சிலின் தீரத்தையும் வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தன.இங்கிலாந்தின் எழுச்சி நாயகனாகத் திகழ்ந்த சர்ச்சில் 1965-ல் ஜனவரிமாதம் 24ஆம் தேதி மறைந்தார். இலக்கியத்திற்கான நோபெல் பரிசு பெற்ற ஒரே பிரித்தானியப் பிரதமர் சர்ச்சில் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :