வேலூர் சிப்பாய் புரட்சி நடந்தது

Home

shadow

                  1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 நாள் வேலூர் சிப்பாய் புரட்சி நடந்தது. ஆங்கிலேயர்களின் பாதுகாப்பு படையில் பணி புரிந்து வந்த இந்தியர்கள் தங்கள் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் நெற்றியில் குங்குமம், விபூதி இடக் கூடாது, தாடி, மீசை வளர்க்க கூடாது என்பது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதற்கு இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்கிலேயே அதிகாரிகளின் அடக்குமுறை அதிகரிக்கவே, 1806-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்திய சிப்பாய்கள் ஆங்கிலேய அதிகாரிகளுடன்  கலகத்தில் ஈடுபட்டனர். ஆங்கிலேயே அதிகாரிகளையும், சிப்பாய்களையும் சரமாரியாக தாக்கிய தென்னிந்திய சிப்பாய்கள் வேலூர் கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதனிடையே சிப்பாய்கள் புரட்சி குறித்து அறிந்த ஆங்கிலேயே அதிகாரிகள், ஆர்காட்டில் இருந்து ஆங்கிலேய ராணுவத்தின் 19-வது குதிரைப்படையை அனுப்பினர். வேலூர் கோட்டைக்குள் நுழைந்த  இந்த படை அங்கிருந்த தென்னிந்திய சிப்பாய்கள் மீது தாக்குதல் நடத்தி கோட்டையை கைப்பற்றியது. இந்த புரட்சியில் 14 பிரிட்டிஷ் அதிகாரிகள் உட்பட 129 ஆங்கிலேயர்கள் மற்றும் 350 தென்னிந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். இந்திய சுதந்திர வரலாற்றில் வேலூர் சிப்பாய் புரட்சி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக உள்ளது. இந்நிகழ்வின் ஞாபகமாக, இந்திய அரசு ஜூலை 2006ல், அஞ்சல் தலை வெளியிட்டது.

இது தொடர்பான செய்திகள் :