ஹாங்காங் தீவை பிரிட்டனுக்கு விட்டுக் கொடுத்தது சீனா

Home

shadow

               1841 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் முதலாவது ஓபியம் போரில் தோற்ற சீனா தன் வசமிருந்த ஹாங்காங்கை பிரிட்டனுக்கு விட்டுக் கொடுத்தது. தேயிலை, பட்டு போன்ற பொருட்களை ஐரோப்பிய நாடுகளில் விற்று அங்கிருந்து பண்டமாற்று முறையில் வெள்ளியைப் பெற்ற சீனாவின் வர்த்தகம் வெகுவாக வளர்ச்சி அடைந்தது. சீனாவின் வெள்ளிக்கையிருப்பைக் குறைப்பதற்காக அங்கு இடைத்தரகர்கள் மூலம் ஓபியம் போதைப் பொருளைவிற்று அதற்குப் பதிலாகச் சீன வணிகர்களிடமிருந்து வெள்ளியைப் பெற்று வந்தன பிரிட்டிஷ் வணிக நிறுவனங்கள். இதனால் சீனப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஓப்பியம் விற்பனையும்  பயன்பாடும் சீனாவில் சட்டப்படி தடை செய்யப்பட்டன. இந்நிலையில் பிரிட்டனின் 1210 டன் எடையுள்ள ஓப்பியத்தை கேண்டோன் துறைமுகத்தில் பறிமுதல் செய்தது சீனா. இதனால் தனது கடற்படையை அனுப்பி சீனாவுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது பிரிட்டன். இதையடுத்து ஏற்பட்ட நான்கின் ஒப்பந்தத்தின் படி பிரிட்டனின் கடல் வர்த்தகத்திற்கு உதவும் வகையில், 1841 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் நாள் ஹாங்காங் தீவை பிரிட்டனுக்கு விட்டுக் கொடுத்தது சீனா.

இது தொடர்பான செய்திகள் :