ஹாங்காங் நாட்டில் டிஸ்னிலாண்ட் தொடங்கப்பட்டது

Home

shadow                    2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ஹாங்காங் நாட்டில் டிஸ்னிலாண்ட் தொடங்கப்பட்டது. சர்வதேச ஹாங்காங் தீம் பார்க்ஸ் என்ற நிறுவனம் பென்னிஸ் பே என்னும் பகுதியின் டிஸ்னிலாண்ட் ரிசார்ட்டில் இந்த டிஸ்னிலாண்டை தொடங்கியது. நாட்டின் பொருளாதாரத்தை பெருக்கவும், சுற்றுலாத்துறை மேம்படுத்த இந்த தீம் பார்கிற்கு அனுமதி வழங்கப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையல் இந்த தீம் பார்க் Main Street,U.S.A., Fantasyland, Adventureland, Tomorrowland, Grizzly Gulch, Mystic Point, and Toy Story Land என்று ஏழு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு கான்டோனிஸ், ஆங்கிலம் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகளில் சேவைகள் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 34,000 மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தீம் பார்க்  தொடங்கப்பட்ட முதல் ஆண்டே 5.2 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டதாக பதிவிடப்பட்டுள்ளது. மேலும் 2013ஆம் ஆண்டு உலகின் தலைசிறந்த தீம் பார்க்கில் இந்த டிஸ்னிலாண்ட் 13வது  இடத்தை பிடித்தது. கடந்த டிஸ்னிலாண்ட் உருவாக்கப்பட்டதில் இருந்து 27.5 ஹெக்டர் நிலபரப்பில் சுமார் 10 மில்லியன் மக்கள் பார்வையிடும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.  


இது தொடர்பான செய்திகள் :