ஹிட்லர் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் இணைந்தார்

Home

shadow         1919ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் நாள் தேதி அடால்ப் ஹிட்லர் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் இணைந்தார்.  ஆஸ்திரியா நாட்டில் அலாய்ஸ் ஹெய்ட்லர் கிளாரா என்ற ஏழைத் தம்பதியருக்கு 1889ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி நான்காவது குழந்தையாக பிறந்தார் ஹிட்லர். சிறுவயது முதலே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஹிட்லர், தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வியன்னா ஓவியக் கல்லூரியில் சேர்வதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை. பிறகு, ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்து முதலாம் உலகப்போரில் போர் வீரராக பங்காற்றினார். அப்போரில் ஜெர்மனிக்கு கிடைத்த தோல்வி, ஹிட்லரின் மனதில் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இயல்பிலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த ஹிட்லர், ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் இணைந்து பணியாற்றினார். இருப்பினும் அக்கட்சியின் செயல்பாடுகள் பிடிக்காமல் விலகிய ஹிட்லர், ஜெர்மன் நாஜி என்ற புதிய கட்சியை தொடங்கி 1934-ல் ஆட்சியையும் பிடித்தார். ஜெர்மனியின் சான்சலராக அதாவது பிரதமராக, 1934-ல் இருந்து 1945-ல் தான் இறக்கும்வரை பதவியில் இருந்தார். முதல் உலகப்போரில் கடைநிலைபோர்வீர்ராக பணியாற்றியவர் இரண்டாம் உலகப்போர் ஏற்படுவதற்கே முக்கிய காரணமாக இருந்தார். யூதர்களை வெறுத்த ஹிட்லர், தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரக்கணக்கான யூதர்களைக்  கொன்றார். வரலாற்றில் அறியப்படும் கொடூரமான சர்வாதிகரிகளில் ஒருவராக இருந்தார் ஹிட்லர்.


இது தொடர்பான செய்திகள் :