ஹிந்தி திவாஸ்

Home

shadow

 

      1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி    இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஹிந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும்  இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இந்திய- ஐரோப்பிய மொழிகளில் ஆரிய மொழி பிரிவை சார்ந்த இந்தி மொழி தேவநாகிரி எழுத்துருக் கொண்டது. சமஸ்கிருத மொழில் இருந்தும் இந்தி மொழி வந்ததாக சொல்லப்பட்டாலும், இதில் உள்ள பல வார்ததைகள் பார்சி மற்றும் அரேபிய மொழிகளிலும் உள்ளது. பார்சி மற்றும் மொகலாயர்களின் காலத்தில் இந்தியாவின் வடக்கு பகுதிகளில் அதிகம் பேசப்படத் தொடங்கய இந்தி மொழி இந்தியாவின் தென் பகுதிகளில் அந்த அளவுக்கு பரவவில்லை. இந்த நிலையில் இந்தியாவில் பொரும்பான்மை மக்களால் பேசப்படும் இந்தி மொழி பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக நாடாளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் ஷரத்து 343-இன் படி இந்தி மொழி இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அங்கரிக்கப்பட்டது. இந்தி மொழி இந்தியா முழுவதும் 40 சதவீதம் மக்களால் பேசப்படுகிறது. உலகம் முழுவதும் 25 கோடி மக்களாலும் பேசப்படும் இந்தி மொழி உலகில் உள்ள அதிக அளவு மக்களால் பேசப்படும் மண்டரின் சைனீஸ், ஸ்பானிஷ், ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக உள்ளது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஹிந்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான து செப்டம்பர் மாதம் 14ஆம் தேதியை ஹிந்தி திவாஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இது தொடர்பான செய்திகள் :