ஹைதராபாத் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை

Home

shadow


            1948 ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் நாள் ஹைதராபாத் பகுதியை இந்தியாவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்துக்கு பின், பெரும்பாலான பகுதிகள் இந்தியாவுடன் அல்லது பாகிஸ்தானுடன் இணைந்தன. அந்த சமயத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் வளமைமிக்க மாகாணமாக கருதப்பட்ட ஹைதராபாத் மாகாணத்தை நிஸாம் Osman Ali Khan ஆட்சி புரிந்து வந்தார். இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைய விரும்பாத அவர், தனி நாடு வேண்டும் என ஆங்கிலேயர்களிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கை நிராகரிக்கப்படவே, இந்திய அரசாங்கத்துடன் 1947ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு ஒப்பந்தமிட்டார். அதன் படி ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்தது போலவே சலுகைகள் தொடரும் என ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தியா தனது ராணுவத்தை அங்கு நிறுத்தும் எனவும் முடிவு செய்யப்பட்டது. நிஸாமின் தனிப்படையாக கருதப்பட்ட razakars-இன் ஆதிக்கம் அதிகரிக்கவே, இந்தியா ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது. ஹைதராபாத் பகுதியை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கை தொடங்கியது.

இது தொடர்பான செய்திகள் :