1176 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் நாள்

Home

shadow


      அமெரிக்க சுதந்திர பிரகடன குழு அமைக்கப்பட்டது. இன்றைய அமெரிக்கா நாடு பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பொழுது 13 தனித்தனி காலணிகளாக பிரிந்திருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து பிரிந்து தனி நாடக இந்த காலனி பகுதிகள் முயற்சி மேற்கொண்டு வந்தன. அதன் ஒரு பகுதியாக இந்த 13 காலணிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திர நாடாக மாறுவதற்கான பிரகடனத்தை உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 5 பேர் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஜான் ஆடம்ஸ், ரோஜர் ஷெர்மன், ராபர்ட் லிவிங்ஸ்டன், பெஞ்சமின் ஃபிராங்க்ளின் மற்றும் தாமஸ் ஜெபர்சன் ஆகியோர் அடங்கிய இந்த குழு 1776-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி அமைக்கப்பட்டது. 1776 ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி வரை செயல்பட்ட இந்த குழு ஜூலை 4-ஆம் தேதி அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டனர். சுதந்திர பிரகடனம் வெளியானதை தொடர்ந்து பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவித்த 13 காலனி பகுதிகளும் அடுத்த கட்டமாக ஒன்றாக ஒருங்கிணைத்து ஐக்கிய அமெரிக்க நாட்டை உருவாக்கும் பணியில் இறங்கின. (அமெரிக்க சுதந்திர பிரகடன குழு அமைக்கப்பட்டது.)

இது தொடர்பான செய்திகள் :