13 கோடுகளுக்கு மேல் இருந்த அமெரிக்க கொடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது

Home

shadow

     1794 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி13 கோடுகளுக்கு மேல் இருந்த அமெரிக்க கொடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த கொடியில் 15 நட்சத்திரங்களும் 15 பட்டைகளும் இடம்பெற்றிருந்தன. அமெரிக்காவின் தேசிய கொடி அமெரிக்க கொடி என அழைக்கப்படுகிறது. 1777 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி, அமெரிக்காவின் புதிய கொடி வடிவமைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் 13 நட்சத்திரங்களும் 13 பட்டைகளும் இருந்தன. அன்றிலிருந்து ஜூன் 14ஆம் தேதியை கொடி தினமாக அமெரிக்கர்கள் கொண்டாடுகின்றனர். தற்போதுள்ள அமெரிக்க கொடியில் 50 நட்சத்திரங்கள் மற்றும் 13 வெள்ளை சிவப்பு பட்டைகள் உள்ளன. 1960 ஆம் ஆண்டு அமெரிக்க கொடியின் 27 வது வடிவமைப்பான இது ஏற்றுக்கொள்ளப்பட்டு 57 வருடங்களாக நடைமுறையில் உள்ளது. 50 நட்சத்திரங்கள் அமெரிக்காவின் ஐம்பது மாகாணங்களை குறிக்கும் விதமாக உள்ளன. அமெரிக்கா உருவாவதற்கு காரணமாக இருந்த - பிரிட்டின் அரசிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 13 பிரிட்டிஷ் காலனிகளை 13 கோடுகள் குறிக்கிறது. பல்வேறு காலகட்டங்களில் மாகாணங்களின் எண்ணிகையை குறிக்கும் வகையில் அமெரிக்க கொடியில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.  அந்த வகையில் அமெரிக்காவில் 15 மாகாணங்கள் இருந்ததை குறிக்கும் வகையில் 1794 ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி, அமெரிக்காவின் கொடியில் மாற்றங்கள் ஏற்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் 15 நட்சத்திரம் 15 கோடுகளும் இருந்தன. இது 13 கோடுகளுக்கு மேல் இருந்த ஒரே அமெரிக்க கொடியாகும்.

இது தொடர்பான செய்திகள் :