1648 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள்

Home

shadow


       டெல்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. பண்டைய இந்தியாவின் கலாச்சார அடையாளமாகக் கருதப்படும் இந்த கோட்டையானது, ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த நாளான 15 ஆகஸ்ட் 1948 முதல், இந்தியப் பிரதமரால் நாட்டு மக்களுக்கு சுதந்திரதின உரையாற்றுமிடமாக இருந்து வருகிறது. கடந்த 2007 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட செங்கோட்டையானது முகலாயப் பேரரசர் ஷாஜகானால் கட்டப்பட்டது. சுமார் 255 ஏக்கர் பரப்பளவில், 2.5 கிலோ மீட்டர் நீல மதில் சுவர்களோடு அமைந்துள்ள செங்கோட்டையின் கட்டுமானப் பணி 1638 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகள் நீடித்த இந்தப் பணியானது 1648 ஆம் ஆண்டு மே 13 ஆம் நாளில் நிறைவடைந்தது. இரண்டாவது உலகபோருக்குப் பின்னர், செங்கோட்டை இந்திய தேசிய இராணுவத்தின் பிரசித்தி பெற்ற இராணுவ ஒத்திகை செய்யும் இடமானது.  1947 இல் சுதந்திரம் அடைந்த பிறகு, கோட்டையின் கட்டுப்பாடு இந்திய இராணுவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. டிசம்பர் 2003 இல், கோட்டையை இந்திய சுற்றுலாத்துறையிடம் இந்திய இராணுவம் ஒப்படைத்தது. இப்போது, சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக இந்திய வரலாற்றை விவரிக்கும் விதமாக மாலை நேரங்களில் ஒலி மற்றும் ஒளிக் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

இது தொடர்பான செய்திகள் :