1742 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11வது நாள்

Home

shadow


              Franklin Stove –ஐ கண்டுபிடித்தார் பெஞ்சமின் பிராங்க்ளின். பல்வேறு நாடுகளில் கடும் குளிர் நிலவும் காலங்களில், வீடுகளை வெப்பமாக வைத்துக்கொள்ள Fireplace எனப்படும் குளிர்காய்வதற்காக நெருப்பு மூட்டும் இடம் அமைக்கப்படும். ஆனால், இதனால் ஏற்பட்ட தீ விபத்துகளில் பலர் உயிரிழக்க நேர்ந்தது. மேலும் குளிர் காலங்களில், நெருப்பு மூட்ட தேவையான விறகு எளிதில் கிடைக்கக் கூடியதாக இல்லை. இதன் காரணமாக பெஞ்சமின் பிராங்க்ளின் பாதுகாப்பான மற்றும் அதிக ஆற்றலுடைய நெருப்பூட்டும் இடத்தை உருவாக்க முற்பட்டார். இதற்காக பல ஆராய்சிகளில் ஈடுபட்டார். 1742ஆம் ஆண்டு தன்னுடைய 36வது வயதில் Franklin Stove–ஐ கண்டுபிடித்தார். இவருடைய புதிய கண்டுபிடிப்பு பாதுகாப்பான மற்றும் அதிக ஆற்றலுடையதாக இருந்தது. இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. தன்னுடைய இந்த கண்டுபிடிப்பு மக்களுக்கு உபயோகமானதாக இருக்க வேண்டும் என கருதினார் பிராங்க்ளின். இவருடைய கண்டுபிடிப்பை வைத்து யார் வேண்டுமானாலும் அதனை மேம்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தார். இதன் காரணமாக தன்னுடைய கண்டுபிடிப்புக்கு அவர் காப்புரிமை பெற மறுத்தார்.

(பிராங்க்ளின் ஸ்டவ் கண்டுபிடிக்கப்பட்டது)

இது தொடர்பான செய்திகள் :