1781 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி

Home

shadow


     யுரேனஸ் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனில் இருந்து ஏழாவுது கிரகம் யுரேனஸ். யுரேனஸ் மற்றும் நெப்ட்யூன் ஆகிய இரண்டும் ஒரே இரசாயன அமைப்பை கொண்டுள்ளன. இவை இரண்டையும் ice giants என அழைக்கின்றனர். சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களின் வளிமைண்டலங்களில் யுரேனஸின் வளிமண்டலம் மிகவும் குளிர்ச்சியானதாக காணப்படுகிறது. அதன் மேற்பரப்பு ஐஸ் கட்டிகளாலும் பாறைகளாலும் உண்டானதாகக் கண்டறியப்பட்டுள்ளது. யுரேனஸ் கிரகத்தை மனித கண்களால் பார்க்க முடியும். ஆனால் இதனை ஒரு கிரகம் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் கருதவில்லை. மற்றொரு நட்சத்திரமாகவே யுரேனஸ் கருதப்பட்டது. 1781 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி விஞ்ஞானி Sir William Herschel யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். அதனை ஒரு வால்மீன் என Herschel கூறினார். யுரேனஸ் குறித்த மேலும் சில ஆராய்ச்சிகள் செய்து, இறுதியில் அதனை ஒரு கிரகம் என Herschel உறுதி செய்தார். யுரேனஸ் என்ற பெயர் வானத்துக்கான கிரேக்க கடவுளின் பெயரில் இருந்து பெறப்பட்டுள்ளது. யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்டு எழுபது வருடங்கள் கழித்தே விஞ்ஞானிகளிடையே அதன் பெயர் குறித்த ஒருமித்த கருத்து ஏற்பட்டது

இது தொடர்பான செய்திகள் :