1796 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் நாள்

Home

shadow


     முதல் யானை அமெரிக்காவுக்கு வந்தது.  கல்கத்தாவில் இருந்து அமெரிக்காவுக்கு “தி அமெரிக்கா” என்ற கப்பல் பயணம் செய்தது. அந்தக் கப்பலில் இந்தியாவில் இருந்து முதன் முறையாக அமெரிக்காவுக்கு யானை ஒன்று கொண்டு செல்லப்பட்டது. இந்த கப்பலின் கேப்டன் Jacob Crowninshield நினைவாக அந்த யானைக்கு Crowninshield  என பெயரிடப்பட்டது. இந்த யானை 450 டாலருக்கு இந்தியாவில் விலைக்கு வாங்கப்பட்டது. 1795 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் தேதி கல்கத்தாவில் கிளம்பிய கப்பல், ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தது. அங்கு அந்த யானையை கப்பலின் கேப்டன் விற்பனை செய்தார். யானையை வாங்கியவர்கள், அதனை பல்வேறு இடங்களில் மக்கள் பார்வைக்கு வைத்தனர். இது குறித்த விளம்பரங்கள் பல்வேறு பத்திரிகைகளில் இடம் பெற்ன. இந்த யானையை அமெரிக்க அதிபர் George Washington பார்வையிட்டதாகவும் குறிப்புகள் உள்ளன. 

இது தொடர்பான செய்திகள் :