1809 ஆம் ஆண்டு  பிப்ரவரி  12 ஆம் தேதி

Home

shadow

அமெரிக்கர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ள அப்ரகாம் லிங்கன் பிறந்தார். அமெரிக்காவின் 16வது அதிபராக இருந்த அப்ரகாம் லிங்கன் 1809ஆம் ஆண்டு கென்டகி (Kentucky)-யில் பிறந்தார். ஏழ்மையான நிலையில் வளர்ந்த லிங்கன் ஒரே ஒ ரு வருடம் மட்டுமே பள்ளிக்கு சென்றார். சிறுவயது முதலே புத்தகங்களை படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த லின்கன் தானாகவே பாடம் கற்க ஆரம்பித்தார். சட்டம் படித்து 1836 ஆம் ஆண்டு வழக்கறிஞரானார். அரசியல் துறையில் பயணிக்க ஆரம்பித்த லிங்கன் 1832 ஆம்ஆண்டுஇல்லினாய்ஸ்மாகாண தேர்தலில் போட்டியிட்டுத்தோற்றார்.1843ல்மீண்டும் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.அடிமைத்தனத்தை எதிர்த்துதொடர்ந்து குரல் கொடுத்துவந்தலிங்கன்1846ஆம் ஆண்டுஅமெரிக்காவின் கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன்பின்  புதிதாக தொடங்கப்பட்ட குடியரசு கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. 1860 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்ட லிங்கன், அடிமைத்தனத்திற்குஎதிராக இருந்தாலும், அடிமைத்தனம் நடைமுறையில் உள்ள மாகாணங்களில் அதனை ஒழிப்பது தனது நோக்கம் இல்லை என்பதை தெரிவித்தார்.1860ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, அமெரிக்காவின் 16வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதிபரானபின்னர்நாட்டில்அடிமைத்தனம் பரவாமல் இருக்க முயற்சிகள் மேற்கொண்டார்.அமெரிக்காவில் உள்நாட்டு போர் தொடங்கியது. 1864ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக லின்கன் அதிபரானார்.உள்நாட்டு போர் முடியும் தருவாயில் 1865 ஆம் ஆண்டு, அடிமை தனத்துக்கு ஆதரவாக இருந்த ஜான் வில்கெஸ் பூத் (John Wilkes Booth) என்ற நாடக நடிகரால் துப்பாகியால் சுடப்பட்டு லிங்கன் உயிரிழந்தார்.

இது தொடர்பான செய்திகள் :