1859 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள்

Home

shadow


      பிரெஞ்சு இயற்பியலாளர் பியரி கியூரி பிறந்தார். 1859 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் பியரி கியூரி பிறந்தார். தனது 14 ஆம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது. இவரது அண்ணனுடன் இணைந்து முதல் முக்கியமான அறிவியல் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது பியரியின் வயது 21. இருவரும் சேர்ந்து அழுத்த மின் விளைவினைக் கண்டுபிடித்தனர். மின்விளைவுத் தத்துவத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சு மின்னோட்டமானியை உருவாக்கினர். பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறையே 'கியூரி விதி' என்று அழைக்கப்படுகிறது. 1895 ஆம் ஆண்டு சில ஆய்வுகளுக்காக மேரி கியூரி இவரைச் சந்தித்தபோது ஏற்பட்ட நட்பில் அவரைத் திருமணம் செய்துகொண்டார். மேரி கியூரியுடன் இணைந்து பொலோனியம், ரேடியம் முதலிய தனிமங்களைத் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அது தொடர்பான ஆய்விலும் சிறந்து விளங்கினர். 1903 ஆம் ஆண்டு இவர் மேரியுடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு வாங்கினார். 1910 ஆம் ஆண்டு 'கதிரியக்கத் துறை காங்கிரஸ் '(Radiology Congress) என்ற அமைப்பு கியூரி தம்பதியைப் பெருமைப் படுத்தும் விதமாக  கதிரியக்கத்தை அளக்க பயன்படும் அலகிற்கு கியூரி அலகு எனப் பெயரிட்டது. இவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகளும் வெளியிடப்பட்டன.

இது தொடர்பான செய்திகள் :