1863 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி

Home

shadow


 

        உலகின் முதல் சுரங்க ரயில் சேவை தொடங்கப்பட்டது.லண்டன் underground என அழைக்கப்பட்ட லண்டன் சுரங்க ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கப்பட்டது. இதற்கான திட்டம்1830 ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது. 1854 ஆம் ஆண்டு, கட்டுமானப்பணியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டுமானப்பணியை தொடங்குவதற்கு முன் ஒரு சிறிய சோதனை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கத்தை 2 வருடங்கள் உபயோகித்த பின் லண்டனில் உள்ள Paddington-Farringdon இடையே முதல் சுரங்க ரயில் சேவை தொடங்கப்பட்டது. நீராவி என்ஜின்களால் மர வண்டி பெட்டிகள் இழுக்கப்பட்டன. முதல் நாளில் 38,000 பேர் இதில் பயணம் செய்தனர். லண்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களை இணைக்கும் விதமாக இது செயல்பட்டது. Tube வடிவில் சுரங்கப் பாதை இருந்ததால் இதனை Tube என மக்கள் அழைத்தனர். தனியார் வசம் இருந்த இந்த சேவை 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் “UNDERGROUND” என்ற பெயரில் அரசுடன் இணைக்கப்பட்டது. 1933 ஆம் ஆண்டு இந்தப் பயணத்தடத்தை மற்ற ரயில் தடங்களுடனும், பேருந்து தடங்களுடனும் இணைத்து லண்டன் போக்குவரத்து விரிவு படுத்தப்பட்டது. 

இது தொடர்பான செய்திகள் :