1867ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் நாள் - மேரி க்யுரி பிறந்தார்

Home

shadow


மேரி க்யுரி பிறந்தார். இவர் போலாந்து நாட்டில் உள்ள வார்சா என்னும் இடத்தில் பிறந்து பின் பிரான்சில் வசித்தார். 1883ஆம் ஆண்டு தனது பத்தாவது வயதில் க்யூரி  போர்டிங் பள்ளியில் சேர்ந்து தங்கப்பதக்கத்தோடு வெளியேறினார். தனது மேற்படிப்பிபை  பிளையிங் பல்கலைகழகம் என்னும் போலிஷ் பாடத்திட்டம் நடத்தும் பல்கலைக்கழகத்தில் படித்தார். தனது செயல்முறை அறிவியல் பயிற்சியை அங்குள்ள தொழிற்சாலை மற்றும் விவசாய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் தொடங்கினார்.மேரி க்யூரி 1896 ஆம் ஆண்டு 1896இல் கதிர் வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். பெக்கிவிரல் யுரேனியம் உப்புகளும் எக்ஸ்-ரே கதிர்கள் போன்ற கதிர்களை வெளியிடுகின்றன என்று கண்டார். பின் தனது கணவர் பியரி க்யுரியுடன் இனைந்து ரேடியத்தைக் கண்டுபிடித்தார். 1897 ஆம் ஆண்டு, விஞ்ஞானி ஹென்றி பெக்குரெல் (Henri Becquerel), யுரேனியத்திலிருந்து X-ray போன்ற கதிர்கள் வெளியாவதை கண்டறிந்தார். அதற்கு பின், Radioactivity எனப்படும் கதிரியக்கம் தொடர்பான ஆராய்சிகளில் ஈடுபட்டிருந்த மேரி க்யுரி மற்றும் பியரி க்யுரி தம்பதியினர்,யுரேனியம் குறித்த ஆராய்சிகளில் ஈடுபட ஆரம்பித்தனர். யுரேனியத்தில் கதிரியக்கத்துக்கு காரணமான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கதிரியக்க ஐசோடாப்பு பொலோனியத்தைக் கண்டுபிடித்தனர். மேரி க்யுரி போலாந்து நாட்டில் பிறந்தவர் என்பதால் அதற்கு பொலோனியம் என பெயரிடப்பட்டது. அதன் பின் இரண்டாவதாக ஒரு கதிரியக்க பொருளை 1898 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி கண்டுபிடித்தனர். இதற்கு ரேடியம் என பெயர்சூட்டினர். 1903 மற்றும் 1911 ஆம் ஆண்டுகளில் இயற்பியலுக்கான நோபல் பரிசை இரண்டு முறை பெற்ற முதல் நபர் என்ற சிறப்பை பெற்றார். 1914ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளைப்பொருத்த உதவி செய்தார். க்யூரி ஆண்டாண்டு காலாமாக தனது ஆய்வுகளுக்காக கதிர்வீச்சின் வெளிப்பாட்டில் வேலை பார்த்ததால் அப்பிலாஸ்டிக் இரத்த சோகையால், 1934 ஆம் ஆண்டு மறைந்தார். 

இது தொடர்பான செய்திகள் :