1879ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி

Home

shadow

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும்கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்தார். சரோஜினி நாயுடு கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மைகொண்டவராகத் திகழ்ந்தார். ஹைதராபாத்தில் பிறந்த இவர் சென்னை, லண்டன், கேம்பிரிஜ் உள்ளிட்ட நகரங்களில் கல்வி பயின்றார். 1905ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது இந்திய தேசிய இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார் சரோஜினி. அதே ஆண்டு இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. 19 வயதில் மருத்துவர் (PaidipatiGovindarajulu) பைடிபடி கோவிந்தராஜூலுவை திருமணம் செய்து கொண்டார். 1915 முதல் 18 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு சமூக நலன், பெண்களின் முன்னேற்றம் மற்றும் தேசியவாதம் பற்றிய மக்களிடையே விழிப்புணர்வைஏற்படுத்தினார். 1925 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.1931ஆம் ஆண்டு காந்தியுடன் வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்றார். காந்தியுடன் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார். சுதந்திர இந்தியாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமையையும் பெற்றவர் சரோஜினி நாயுடு.

இது தொடர்பான செய்திகள் :