1881 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி

Home

shadow


     ரஷ்யாவின் மன்னராக இருந்த இரண்டாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டார். ரஷ்யாவின் மன்னராக 1855 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி தன்னுடைய 37 வது வயதில் பதவியேற்றார் இரண்டாம் அலெக்சாண்டர். போலந்து மற்றும் பின்லாந்து நாடுகளின் மன்னராகவும் அவர் திகழ்ந்தார். ரஷ்யாவில் Serfdom எனப்படும் விவசாயிகளை  அடிமைகளாக்கும் முறை நடைமுறையில் இருந்தது. serfs எனப்படும் இந்த விவசாயிகளை இரண்டாம் அலெக்சாண்டர் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இவை தவிர ரஷ்யாவில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். ராணுவத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தார். நீதித்துறை நிர்வாகம் மற்றும் தண்டனைக் குறியீடு சட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வந்தார். இதனால் அதிருப்தி அடைந்தவர்கள் இரண்டாம் அலெக்சாண்டரை கொலை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை செய்தனர். 1881 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் (Saint Petersburg) நகரில் தனது எதிர்ப்பாளர்களால் இரண்டாம் அலெக்ஸாண்டர் கொல்லப்பட்டார். 

இது தொடர்பான செய்திகள் :